அதிகாரம் / Chapter 13
திருக்குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
பரிமேலழகர்
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை-உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க-ஆதலான், அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. விளக்கம் ('உயிர்' என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
English explanation
Guard thou as wealth the power of self-control;Than this no greater gain to living soul
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.