அதிகாரம் / Chapter 133

திருக்குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

பரிமேலழகர்

இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. விளக்கம் ('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.)

English explanation

Let her, whose jewels brightly shine, aversion feignThat I may still plead on, O night, prolong thy reign

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!