அதிகாரம் / Chapter 133
திருக்குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
பரிமேலழகர்
இதுவும் அது. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் சொல்லோ - இன்னும் ஒருகால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? விளக்கம் (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றாள். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப்பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)
English explanation
And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?