அதிகாரம் / Chapter 117
திருக்குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
'தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்ற புணையான் நீந்திக் கடப்பார்' என்ற தோழிக்குச் சொல்லியது. உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புனை இல்லை. விளக்கம் (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை'' என்பது கருத்து.)
English explanation
A sea of love, 'tis true, I see stretched out before,But not the trusty bark that wafts to yonder shore
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.