அதிகாரம் / Chapter 19
திருக்குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.
பரிமேலழகர்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? விளக்கம் ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?