அதிகாரம் / Chapter 20

திருக்குறள் 196

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

பரிமேலழகர்

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. விளக்கம் ('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Who makes display of idle words' inanity,Call him not man, -chaff of humanity

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.