அதிகாரம் / Chapter 20

திருக்குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

பரிமேலழகர்

பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். விளக்கம் (நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

English explanation

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense

If the good speak vain words their eminence and excellence will leave them.