அதிகாரம் / Chapter 58
திருக்குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
பரிமேலழகர்
ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. விளக்கம் ('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம். 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)
English explanation
To smile on those that vex, with kindly face,Enduring long, is most excelling grace
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.