அதிகாரம் / Chapter 132

திருக்குறள் 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர்,' என்று சொல்லி. விளக்கம் ('இவள் தௌ¢வித்தவழியும் தௌ¢யாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அதுதானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது?' என்பதாம்.)

English explanation

I then began to soothe and coax, To calm her jealous mind;'I see', quoth she, 'to other folks How you are wondrous kind

Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."