அதிகாரம் / Chapter 65

திருக்குறள் 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.

பரிமேலழகர்

சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. விளக்கம் [பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச் சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல்; அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல், வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.]

English explanation

Speak out your speech, when once 'tis past disputeThat none can utter speech that shall your speech refute

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.