அதிகாரம் / Chapter 24

திருக்குறள் 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

பரிமேலழகர்

இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். விளக்கம் (உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)

English explanation

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown

The ground which supports a body without fame will diminish in its rich produce.