அதிகாரம் / Chapter 24

திருக்குறள் 238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

பரிமேலழகர்

இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர். விளக்கம் ('எச்சம்' என்றார். செய்தவர் இறந்து போகத்தான் இறவாது நிற்றலின். இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)

English explanation

Fame is virtue's child, they say; if, then,You childless live, you live the scorn of men

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.