அதிகாரம் / Chapter 24
திருக்குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன்?
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.
பரிமேலழகர்
புகழ்பட வாழாதார் - தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார்-அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? விளக்கம் (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.)
English explanation
If you your days will spend devoid of goodly fame,When men despise, why blame them? You've yourself to blame
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.