அதிகாரம் / Chapter 83

திருக்குறள் 828

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.

பரிமேலழகர்

ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். விளக்கம் (தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார், 'ஒடுங்கும்' என்பார். பவைர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும் அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¢யற்க' என்பது கூறப்பட்டது.)

English explanation

In hands that worship weapon ten hidden lies;Such are the tears that fall from foeman's eyes

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.