அதிகாரம் / Chapter 8

திருக்குறள் 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

பரிமேலழகர்

அன்பின் வழியது உயிர்நிலை-அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த-அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. விளக்கம் (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பு இல்வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Bodies of loveless men are bony framework clad with skin;Then is the body seat of life, when love resides within

That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.