அதிகாரம் / Chapter 68
திருக்குறள் 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.
பரிமேலழகர்
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் - அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். விளக்கம் ['அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து; அவன் செய்து போந்த உபாயம். அதனை யறியவே, தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.]
English explanation
Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the task
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof,