அதிகாரம் / Chapter 68
திருக்குறள் 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.
பரிமேலழகர்
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தனோடு ஒக்கும். விளக்கம் [பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.]
English explanation
By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing arother.