அதிகாரம் / Chapter 68

திருக்குறள் 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.

பரிமேலழகர்

முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர் தூக்கிச் செய்க. விளக்கம் [முடிவு, ஆகுபெயர். 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரியதாயின் செய்க' என்பதாம்]

English explanation

Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great to be gained {on its completion).