அதிகாரம் / Chapter 72

திருக்குறள் 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

பரிமேலழகர்

ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவால் ஔÿபுள்ளிÿளியாரவைக் கண் தாமும் ஒள்ளியாராக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய கதையின் நிறத்தைக் கொள்க. விளக்கம் (ஒள்ளியார் என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் ஒளியார் என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லரை வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரிலும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.) ---)

English explanation

Before the bright ones shine as doth the lightBefore the dull ones be as purest stucco white

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.