அதிகாரம் / Chapter 11
திருக்குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.
பரிமேலழகர்
திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். விளக்கம் ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக் கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)
English explanation
Each benefit to those of actions' fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.