அதிகாரம் / Chapter 11

திருக்குறள் 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

பரிமேலழகர்

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்-'இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்' என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது-அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். விளக்கம் (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம். பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)

English explanation

Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.