அதிகாரம் / Chapter 73

திருக்குறள் 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.

பரிமேலழகர்

கற்றார்முன் கற்றசெலசொல்லி - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம்கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்து கொள்க. எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், விளக்கம் (வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக; சொல்லவே, அவரும் அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்க பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. அதனால் அவனது ஒருசார் பயன் கூறப்பட்டது.)

English explanation

What you have learned, in penetrating words speak out beforeThe learn'd; but learn what men more learn'd can teach you more

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).