அதிகாரம் / Chapter 12
திருக்குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.
பரிமேலழகர்
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக-அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. விளக்கம் (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
English explanation
If, right deserting, heart to evil turn,Let man impending ruin's sign discern
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."