அதிகாரம் / Chapter 22

திருக்குறள் 219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

பரிமேலழகர்

நயன் உடையான் நல்கூர்ந்தான்ஆதல்-ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது; செயும் நீர செய்யாது அமைகலா ஆறு-தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். விளக்கம் (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)

English explanation

The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none

The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.