அதிகாரம் / Chapter 22

திருக்குறள் 220

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.

பரிமேலழகர்

ஒப்புரவினால் கேடு வரும் எனின்-ஒப்பரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து-அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. விளக்கம் (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது. புகழ் பயத்தல் நோக்கி, இதனான் ஒப்புரவினா கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)

English explanation

Though by 'beneficence,' the loss of all should come,'Twere meet man sold himself, and bought it with the sum

If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.