அதிகாரம் / Chapter 22

திருக்குறள் 218

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர்

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்-செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்; கடன் அறி காட்சியவர்-தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். விளக்கம் (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)

English explanation

E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.