அதிகாரம் / Chapter 25
திருக்குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.
பரிமேலழகர்
வலியார் முன் தன்னை நினைக்க-தன்னில் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க; தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. விளக்கம் ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறினையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, 'இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம்' என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)
English explanation
When weaker men you front with threat'ning brow,Think how you felt in presence of some stronger foe
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.