அதிகாரம் / Chapter 50
திருக்குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.
பரிமேலழகர்
முற்றும் இடம் கண்ட பின் அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; எவ்வினையும் தொடங்கற்க - அவர் மாட்டு யாதொரு வினையையும் தொடங்கா தொழிக; எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழா தொழிக. விளக்கம் [முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலோடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து, ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.]
English explanation
Begin no work of war, depise no foe,Till place where you can wholly circumvent you know
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.