அதிகாரம் / Chapter 50

திருக்குறள் 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர்

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கொத்த கோட்டவுமாய களிறுகளை; கால் ஆழ் களரின் நரி அடும்-அவை கால் ஆழும் இயல் பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் விளக்கம் ['முகம்' ஆகுபெயர். 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்; வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.]

English explanation

The jackal slays, in miry paths of foot-betraying fen,The elephant of fearless eye and tusks transfixing armed men

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.