அதிகாரம் / Chapter 4

திருக்குறள் 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர்

அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி-அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்-அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம்-இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. விளக்கம் (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)

English explanation

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,Lust, evil speech-these four, man onwards moves in ordered path

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.