அதிகாரம் / Chapter 35
திருக்குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
பரிமேலழகர்
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றி விடாதாரை; இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. விளக்கம் (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல்; 'விடாஅதவர்க்கு' என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)
English explanation
Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.