அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
பரிமேலழகர்
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. விளக்கம் (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார்' இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்,' என்பது கருத்து.)
English explanation
To those who 've proved love's joy, and now afflicted mourn,Except the helpful 'horse of palm', no other strength remains
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.