அதிகாரம் / Chapter 112
திருக்குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
பரிமேலழகர்
இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. அனிச்சமே வாழிநன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக; மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். விளக்கம் (அனிச்சம்: ஆகுபெயர். 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
English explanation
O flower of the sensitive plant! than theeMore tender's the maiden beloved by me
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.