அதிகாரம் / Chapter 75
திருக்குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.
பரிமேலழகர்
அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற் சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாய விடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். விளக்கம் (வாளா இருந்தாலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.)
English explanation
Howe'er majestic castled walls may rise,To craven souls no fortress strength supplies
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.