அதிகாரம் / Chapter 113
திருக்குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
பரிமேலழகர்
இதுவும் அது காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. விளக்கம் ('எப்பொழுதும் எம் நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை?' என்பது குறிப்பெச்சம்.)
English explanation
Within my heart my lover dwells; from food I turnThat smacks of heat, lest he should feel it burn
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.