அதிகாரம் / Chapter 92

திருக்குறள் 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.

பரிமேலழகர்

மாய மகளிர் முயக்கு - உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பது தோன்ற அவர் மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)

English explanation

As demoness who lures to ruin woman's treacherous loveTo men devoid of wisdom's searching power will prove

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.