அதிகாரம் / Chapter 121
திருக்குறள் 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணால்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணால்கொல்லோ? விளக்கம் (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றான்.)
English explanation
Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.