அதிகாரம் / Chapter 14

திருக்குறள் 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

பரிமேலழகர்

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்-எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர்-அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். விளக்கம் (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம்பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி எய்துவர்' என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)

English explanation

'Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.