அதிகாரம் / Chapter 89
திருக்குறள் 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும். இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.
பரிமேலழகர்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். விளக்கம் ('குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)
English explanation
Domestic life with those who don't agree,Is dwelling in a shed with snake for company
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.