அதிகாரம் / Chapter 67
திருக்குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது..
பரிமேலழகர்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். விளக்கம் ['எளிதின் எய்துப' என்பார், 'எண்ணி யாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை. முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.]
English explanation
Whate'er men think, ev'n as they think, may men obtain,If those who think can steadfastness of will retain
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.