அதிகாரம் / Chapter 28
திருக்குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.
பரிமேலழகர்
கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது: யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல்பட கூற்றானே அறிந்து கொள்க. விளக்கம் (கணைக்குச் செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறிவும் ஆறு கூறப்பட்டது.)
English explanation
Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.