அதிகாரம் / Chapter 50
திருக்குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிமேலழகர்
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன்; சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின்; ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். விளக்கம் ['செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்து விடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப் பெருமை நோக்கி, இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக, அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.]
English explanation
If lord of army vast the safe retreat assailOf him whose host is small, his mightiest efforts fail
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.