அதிகாரம் / Chapter 50
திருக்குறள் 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.
பரிமேலழகர்
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி, அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின்; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம் திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. விளக்கம் ['திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ்வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.]
English explanation
Save their own fearless might they need no other aid,If in right place they fight, all due provision made
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.