அதிகாரம் / Chapter 109

திருக்குறள் 1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.

பரிமேலழகர்

அவள் முலைகளினாய வருத்தம் கூறியது. மாதர் படா முலைமேல் துகில் - இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். விளக்கம் (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றார். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றுஞ் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)

English explanation

As veil o'er angry eyes Of raging elephant that lies,The silken cincture's folds invest This maiden's panting breast

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.