அதிகாரம் / Chapter 117

திருக்குறள் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குஉரைத்தலும் நாணுத் தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன். இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.<br /> இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

'ஈண்டையார் அறியாமல் மறைத்தல், ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது.) இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது; இனி என் செய்கோ? விளக்கம் (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பத பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத்தரும்' என்றும் கூறினாள்.)

English explanation

I cannot hide this pain of mine, yet shame restrainsWhen I would tell it out to him who caused my pains

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.