அதிகாரம் / Chapter 117

திருக்குறள் 1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

'காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது', என்ற தோழிக்குச் சொல்லியது. நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகு‘மறு போல மிகாநின்றது. விளக்கம் ('அம்மறைத்தலால் பயன் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ''இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்'' என்புழிப்போல, ஈண்டு சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அடு பாடமின்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.)

English explanation

I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.