அதிகாரம் / Chapter 41
திருக்குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர்
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும். விளக்கம் ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
As worthless shows the worth of man unlearned,When council meets, by words he speaks discerned
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of thelearned).