அதிகாரம் / Chapter 41

திருக்குறள் 404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர்

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். விளக்கம் (ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)

English explanation

From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.