அதிகாரம் / Chapter 111

திருக்குறள் 1106

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால் - தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. விளக்கம் (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று - வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)

English explanation

Ambrosia are the simple maiden's arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again

The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.