அதிகாரம் / Chapter 61

திருக்குறள் 603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர்

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத் தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். விளக்கம் (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின், 'பேதை' என்றும், அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)

English explanation

Who fosters indolence within his breast, the silly elf!The house from which he springs shall perish ere himself

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.